ப.வை. ஜெயபாலன்

சந்தம் சிந்தும் சந்திப்பு277
வலி
“வரன் ஒன்று லண்டனில்
வாய்த்துளது என்று
வாங்கி வைத்த Doctor
பட்டத்தை கொண்டு
விரைவாக என் பெற்றோர்
ஏற்பாடு செய்து
விமானத்தில் எனை ஏற்றி
இங்கு வர வைத்தார்
தரகர்வழி இனாம் என்று
பல இலட்சம் பெற்று
தாய்வழி காணி மனை
சீதனமாய் பெற்று
வருகை தந்த என்னை ஓர்
வாடகை அறையில்
வாழ்க்கையை தொடர
வழி செய்தார் கணவர்.

கணக்காளர் வேலை என்று
கதை விட்டார் என்று
கண்டுகொண்டேன் நிறுவனத்தில் பணியாளன் இவனை
பணக்காரர் எனக் கண்ட உறவாளர் வீட்டில்
பல தடவை ஆயிரங்கள் பெற்று வர செய்தார்
மண முறிவே வழி என்று
பெற்றோர்க்கு சொல்ல
மன்றாடி நின்றார்கள்
சமாளித்து செல்ல
மணவாழ்வின் பயனாக மகவுகள் மூவர்
மணதுக்கு ஆறுதலாய்
இவர்களே ஆவர்.

தாங்கேலா தொல்லைகளால் தற்கொலைக்கு முயன்றேன்
தள்ளாடும் கடன் அடைக்க தொடர் வேலை செய்தேன்
பாங்காக வளர்ந்திட்ட பையரும் துயரில்
பட்டதினி போதுமென தனியாய் பிரிந்தேன்
வாங்கிடவே மணமுறிவு கோடேறி வாதம்
வை ஜீவநாம்சம் என கணவனோ வாதம்
ஈங்குள்ள சட்டங்கள் பெண் என்றும் பாரா
இதய வலி நம் நால்வர்க்
என்றுதான் தீரும்?
-ப.வை.ஜெயபாலன்-

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading