மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 253
13/02/2024 செவ்வாய்
“பிள்ளைக்கனியமுது”
——————————
அம்மி மிதித்து, அருந்ததி காட்டி,
அடுத்தடுத்து வருடமும் போக்கி,
அம்மா எனவழைக்கும் அப்பேறு,
ஆகவில்லை என்று பெரும்கீறு!

சாதகம், சாத்திரம் பார்த்தோம்!
சாமியை வேண்டி நோற்றோம்!
பாதகம் ஏற்படாது பார்த்தோம்!
பாவ விமோசனம் செய்தோம்!

பிரபல வைத்தியம் நாடினோம்!
பிறபல சோதனை செய்தோம்!
இரவில் உறங்காது உழன்றோம்!
இறைவன் முறையீடு செய்தோம்!

ஆண்டுகள் நகர்ந்தன ஐந்தாய்!
அனல்மேல் இட்ட இரும்பாய்!
பாடுகள் பட்டோம் இருவராய்!
பாவங்கள் அறியாத பாவிகளாய்!

ஆண்டுகள் ஆறு உருண்டோடின!
ஆண்டவன் கண்களும் விழித்தன!
ஆண்மக வொனறு பரிசளித்தான்!
அவனே முதற்கனி எமக்கானான்!

நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading