மாதவமே உந்தனை

சிவருபன் சர்வேஸ்வரி

மாதவமே உந்தனை

மானிலம் செழித்தது மலர்க்கொடிகள் படர்ந்தது //
தேனினமாய் வாழ்வுகள் அதுவே பொற்காலம் //

மூளும் நிலையும் மூண்டது அது பெரும் நெருப்பும் //
வாழும் பயிர்கள் வகைவகையாய் எங்கே கேள்விக்குறிதானே //
மீளும் கட்டம் இல்லை மீட்டிடத் துணையுமில்லை //

தரமும் தீரமும் செறிந்துமே தெறிக்க //
தாரையும் வார்த்த மாதவமே உந்தனை //

சிந்தையில் ஏற்றியே தொழுதிடும் முறையே //
மனமது கனக்கும் வலியது துடிக்கும் //

நினைந்தது எங்கே கேள்வியும் கணைதொடுக்கும்//
ஞாபகங்கள் நிழலாட ஞாலத்தில் ஒளியாட //
தீபங்கள் மிளிர்ந்ததுவே
தியாகங்கள் நெருப்பாக //
தாபங்கள் ஊறியதும் தணியாது ஆடியதும் //
தூபங்கள் போட்டென்ன கல்வெட்டில் பொறித்ததுவே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading