தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மாற்றம் ஒன்றே

ஜெயம் தங்கராஜா

பாமுக தோற்றத்தில் விழியூறும் மாற்றம்
நாமதனை பார்க்கையிலே சந்தோச மூட்டம்
படியேற்றி படைப்பவரை ஊக்குவிக்கும் தளமொன்று
குடியேற்றி வனப்பத்தனை உள்ளத்தை கொள்ளைகொள்கிண்றதின்று

எவரும் உள்நுழைவதற்கான முகப்புப் பக்கம்
சுவரில் சித்திரமாய் பார்வைக்கு தித்திக்கும்
புதியவர் பலரை ஈர்த்துவிடக்கூடிய முயற்சி
புதுவித பாமுகமாய் வடிவத்திலே கவர்ச்சி

அணியணியாய் கணனியது செய்துவிடும் வித்தை
துணிந்ததை செய்யற்படுத்தும் நம்மவரோ விந்தை
ஊட்டிக்கொண்டு நுட்பங்களை ஓடுகின்ற தன்மை
காட்டிவிடும் மாற்றங்களை உலகறிந்த உண்மை

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

Continue reading