மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன் வேலும் நூலும் வேரின் கூர்மையும் நூலின் அறிவும் வேண்டும் வாழ்விற்குத் தேவை என்றுமே! வேரின் கூர்மை அசுரரை அழித்து மக்களைக் காத்ததே நூலின்...

Continue reading

“மாற்றம்”

நேவிஸ் பிலிப் கவி இல (145) 5/ 09/ 24

காலச் சுழற்சியிலே
மாறி வரும் உலகினிலே
மாற்றம் ஒன்றே மாறாதது
நாகரீக வாழ்க்கையிலே
மோகம் கொண்டு வாழ்கின்றோம்

வரலாற்றை மறந்தோம்
பண்பாட்டை இழந்தோம்
வாழ்க்கை முறையை
வாடிக்கை வழக்கங்களை
மாற்றி விட்டடோம்

வேர் தேடி ஊற்றுத்தேடி
பழமையின் அழகினை இரை மீட்டி
நவீனத்தோடு சவால் தொடுக்க
முனைப்போடு ஓடுகின்றோம்

பழமையை புதுப்பித்து
பாரம்பரிய நடை முறைக்கு
புத்துயிரூட்ட ஏனோ
மறந்திட்டோம்

கதை சொல்லிகள் அருகிப் போக
கேட்பவர்கள் ஆர்வம் குன்ற
சொல்வதற்கும் ஆளில்லை
கேட்பதற்கும் நேரமில்லை்

மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ.?
தார்மீக எண்ணங்களை
ஆழ வேரூன்றி அகலக் கிளை பரப்ப
மாறுவோம் மாற்றம் காண்போம்

நன்றி வணக்கம்.
நேவிஸ் பிலிப்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

Continue reading

சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

Continue reading