முதுமை

மனோகரி ஜெதீஸ்வரன்

முதுமை காணும் முன்னே
மூச்சை விடுபவர் பலரே
முதுமை கண்டு வாழ்பவர் சிலரே

முதுமை என்பதும் வரமே
அதுவும் ஒருவகைத் தவமே

வந்திடும் முதுமை
தந்திடும் பழுதை
ஏந்திடத்தான் வேண்டும் பழுவை

நொந்து அழுதால்
நோவு கழறுமோ
சந்துபொந்து புகுந்து
சுழன்று வந்து
சாந்தி தந்திடுமோ சாவு

வில்லென முதுகு வளைந்தால்
பொல்லை ஊன்று
சொல்லும் பல்லும் சிதைந்தால்
பொய்ப்பல்லைக் காவு
தொல்லைதரும் நோயை
எல்லையிட்டு விரட்டு
அதிகாலையிலே பாயைச் சுருட்டு
தீங்கில்லா வாழ்வை
தியானத்தால் நிகழ்த்து

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading