தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ரஜனி அன்ரன்

“ பசுமை “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 31.03.2022

இறைவன் அளித்த வரம்
இயற்கை தந்த அற்புதம்
பசுமையெனும் வளம்
செழுமை சேர்க்கும் திறன்
பசுமையின் செழிப்பு பாருக்கே வனப்பு !

நீண்ட நெடிய வானம்
விரிந்து கிடக்கும் பூமி
பரந்து இருக்கும் கடல்
உயர்ந்து நிற்கும் மலைகள்
ஆங்காங்கே சமவெளிகள் பள்ளத்தாக்குகள்
ஆறுகள் குளங்கள் ஏரிகள் நீர்நிலைகள்
அடர்ந்த வனங்கள் மரஞ்செடி கொடிகள்
அத்தனையும் மொத்தமாய் பசுமையின் வனப்பே !

பச்சைக் கம்பளம் விரித்த புல்வெளிகள்
இச்சை தரும் பச்சை வண்ணம்
மனதிற்கு இனிமையாய் மகிழ்வின் உச்சமாய்
புத்துணர்வைத் தருவது பசுமை
பூமியைப் பசுமையாக்க பசுமைஇயக்கம்
மக்களுக்கு பசுமையைப் புகட்ட பசுமைக்கட்சி
விவசாயத்தில் பசுமையைப் பேண பசுமைப்புரட்சி
பூமியின் வளத்திற்கு வனப்பு பசுமையே !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading