“அறிவின் விருட்சம்”
அறிவின் விருட்சம்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
30.03.23
ஆக்கம்-263
கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்
கிணற்றிலிருந்து எடுத்துப் பயன்படுத்திய நீரை
வீணாக்காது வாய்க்காலிட்டு வீட்டுத்
தோட்டத்தில் பயிரிட்டு வீணாகும் குப்பைக்
கழிவுகளைப் பசழையாக்கி காய்கறி,பழங்கள்
நல்லது பெற்று நோயின்றி நீண்ட காலம்
வாழ்ந்தோர்
விஞ்ஞான உலகில் வித்தையோடு முத்தெடுக்கும்
இன்றைய மனிதன் கடலிலே குப்பை கொட்டி
கடல் வாழ் உயிரினங்களிற்கு சேதமிட்டு
உக்காத பொலித்தீன் கழிவுகளில் சிக்கித்
தவிக்கும் பரிதாப மரணங்கள்
கடதாசியில் சுற்றிய பொட்டலம் அன்று
தகர டப்பா படகுப் பாலமாய் கண்ணீரோடு
தண்ணீரில் மிதக்கிறது இன்று
மண்ணில் உக்கியது விரைவாயன்று
சிக்கித் தவிக்கும் மண் நுண்ணுயிரும்
கடல் உயிரும் கூனிக் குறுகி
செய்வதறியாது விறைத்து நிற்கிறது
கரையும் தண்ணீரில் நிறையும்
கழிவுகள் கண்டு
சிந்தித்தால் அற்ப விடயமே
தந்த இடத்தை சொந்தமாக்கி
அந்தந்தக் கழிவை எந்தெந்த
இடத்தில் சேர்த்து தம் கடமை
தவறாது செய்திடின் கரையும்
தண்ணீரில் நிறையும் கழிவுகள்
குறையுமே.
