வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
பெண்ணே…
அகிலப் பரிதியின் அவதாரம்
ஆற்றும் செயல்களின் அத்திவாரம்
இல்லக் கோபுர ஒளிவிளக்கு
ஈகை அன்பின் முதலீடு
உள்ளச் செறிவின் உத்வேகம்
ஊற்றாய் பாசப் பிரவாகம்
ஐக்கியம் போற்றும் ஆதாரம்
ஒற்றுமைக் குடையின் அடித்தளம்
ஓங்கார சக்தியின் பிறப்பிடம்
வெற்றிடமற்ற தாய்க்குலம்
பெண்ணே பேறுகொள் பேராற்றல்
பெருமையுறு வாழ்வின் பெரும்பேறே.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading