புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

இலக்கு…..
வாழ்வின் சிறகு விரிந்திடும்
இலக்கின் கதவு திறந்திடும்
உயர்வின் எண்ணம் பரந்திடும்
உலகே வானாய் வசப்படும்

அகத்தின் பிடிக்குள் கனவுகள்
ஆயிரம் எண்ணத்தின் பதிவுகள்
ஆழமாய் உழுதிடும் வயலிலே
ஆணி வேரிடும் விளைபயிரே

இலக்காய் மிளிரும் குறிக்கோளே
இலட்சியம் நிறைக்கும் வாழ்வரணாய்
இலக்கற்ற படகுகள் திசையறியா
இலக்கின் அம்புகள் குறிசுட்டும்
இலட்சிய வேட்கையில் முதற்படியாய்
இயல்பில் ஒன்றும் இலக்கின் வழி.
மிக்க நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading