புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
விருப்புத்தலைப்பு
அன்னையர் தினமே….
வரமாய் கிடைத்த உறவிது
வாஞ்சை நிறைந்த உளமிது
உறவாய் போற்றும் உள்ளன்பு
உதிரம் கலந்த தாயன்பு
புவனம் போன்ற பொறுமையும்
ஐக்கியம் காக்கும் தகமையும்
அன்பின் ஊற்றாய் அணிகலனாய்
பண்பில் பலதை வேதமாய்
பக்குவமான பட்டறிவை
பாசம் நிறைத்து பகிர்பவர்
சேய்கள் வாழ்வு செம்மைபட
சிரத்தை காட்டும் பேரன்பே
கடினம் பலதைக் கடந்துமே
காக்கும் தெய்வம்
தாய்மையே
என்றும் எமக்காய் வாழ்பவர்
எதிலும் உறவாய் திகழ்பவர்
ஈடிணையற்ற தாயன்பு
ஈகம் நிறைந்த பேரன்பு.
நன்றி
மிக்க நன்றி

*14.5.23.ஐரோப்பாவில் அன்னையர் தினம்)*

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading