புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
வசந்தா ஜெகதீசன்
ஓ’இலண்டன்தமிழ்வானொலியே…..
வளர்ச்சியின் குன்றிலே பாமுகப் பரிணாமம்
வற்றாத உருவாக்கம் எழுத்தாக்க களமாகும்
சிந்தையின் விதைப்பே எழுத்தாக்க முனைப்பு
அடுத்த தலைமுறை நோக்கிய தொகுப்பு
எத்தனை தடவைகள் வீழ்ந்தும் எழுந்தது
எடுத்திட்ட முயற்சியில் இடைவிடாது தொடர்ந்தது
எம்மவர் படைப்பே சங்கமானது
பொன்மாலை அரங்குகள் புடமிட்டுத் தொடர்ந்தது
உருவாக்க இசையில் உயர்ந்திடும் நுட்பமும்
பல்கலை அரங்காய் பாமுகக்குன்றாய்
வித்தகம் வளர்த்திட விதைப்புக்கள் பெருகிட
எழுத்தாளர் வாரம் இணைமகுடமாய் ஆனது
தனித்துவப்படியில் தன்னம்பிக்கைத் திடத்தில்
எத்தனை பேர்கள் எழுதுகோல்கள்
நிமிர்த்திய தியாகம் நேர்த்தியின் ஜாகம்
படிப்படியானது பாமுகம் பூத்தது
இட்டசுழியில் குன்றில் விளக்காய்
இலக்கின் பிடியில் வேரின் விழுதாய்
கற்கை நெறிக்குள் காத்திடம் பொறித்தது
ஒற்றைக் கூடமாய்
சுழியிட்ட ஆசான் வழியிட்ட வரத்தில்
நிலைபெற்றுயரும் நித்திலம் போற்றும்
காலக்கதவுகள் சாலச்சிறந்தது.
நன்றி
மிக்க நன்றி
