தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வஜிதா முஹம்மட்

முக மூடி

மார்க்கம் சொன்ன வழிமுறை
மகிழ்வாய் ஏற்றல் நெறிமுறை

கட்டாயமில்லை விதிமுறை
வி௫ம்பியணிதல் அவர் அவர்
சுதந்திர ௨ரிமையின் நிறை

அடக்குமுறையல்லை முக மூடி
அசிங்கப்பார்வை அகற்றும்
பாவைஅரன் நாடி

சமயநெறி சொல்லும் கலாச்சாரம்
ஆடைக்குள் அடங்கி அழகுபெறும்
முக மூடி

முகமூடி நாம் திரிகையிலே
முணங்கியது அரக்க மனங்கள்

ஆடைக்கு விடுதலை கொடு
அடக்கு முறை மார்க்க வதை

ஊர்ந்து வ௫ம் வழிகள்
உலவிவந்த பலகதைகள்

௨லக மானிடம் போட்டது
முக மூடி
போடாவிட்டால் விதித்தது
தண்டனை

அரக்க எண்ணத்திற்கு
அணையிட்டு முகமூடிக்குள்

முடங்க வைத்தது மார்கமில்லை
முடக்கி வைத்தது கொரோனா

முகமூடி அடக்கு முறை
என்று தப்புக் கணக்கு போடாதே

முகமூடி எங்கள் அணிகலன்
என்றும் பார்வைபடா பாவையர்
கவசம்
வி௫ம்பித்தானே அணிகின்றோம்
விவாதங்கள் ஏனோ அலங்கோலம்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading