அஞ்சலெனும் அற்புதம்

ரஜனி அன்ரன் (B.A) “அஞ்சலெனும் அற்புதம்” 09.10.2025

நூற்றாண்டுகள் கடந்த பந்தம்
பற்றோடு வாசல் தேடிவரும் வசந்தம்
தகவல் தொடர்பின் அச்சாரம்
காலத்தின் இணைப்புப் பாலம்
இன்றுவரையும் தொடரும் பயணம்
அன்பினைச் சுமந்துவரும் ஆரம்
அஞ்சலெனும் அற்புதப் பாலம் !

உலகின் மூலைமுடுக்கெல்லாம் பறந்துசெல்லும்
மொழிக்கான விடிவெள்ளிநீ
வெள்ளைக் காகிதத்தின் கவிதைநீ
எமைக் கொள்ளை கொண்ட காவியம்நீ
சொந்தபந்தங்களின் சுகநலங்கள்
தூரதேச உறவுகளின் நடப்புக்களை
துல்லியமாய் தாங்கிவரும் பெட்டகமே
அஞ்சலெனும் அற்புதமே வாழியநீ !

அஞ்சல் தலையும் சரித்திரம் பேசும்
அத்துணைச் சிறப்பு உன்தார்ப்பரியம்
ஊரறியும் உலகறியும் உன்சேவையின் அர்ப்பணம்
அஞ்சலெனும் காவியமே நீவாழி !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading