அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன்

அதிகரிக்கும் வெப்பம்

கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும் வாழ்விற்கு கதிரவன் ஒளி

காலை வந்தால் கணகணக்கும் வெயில்
மாலைமுழுவதும் மணிக்கணக்காய் பகல்
சோலையோர குயிலும் சுகந்தம் பாடும்
சொந்தம் யாவும் குதூகலித்து மகிழும்

கோடை வெப்பம் அதிகரித்து கூடுது
கொள்ளை நோய்களும் மிகுத்து பரவுது
தும்மல் பலருக்கு நோயாக மாறுது
துரத்தும் கிருமியும் வளர்ச்சியாயக்; கூடுது.

நகுலா சிவநாதன் 1813

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading