அதுவொரு கனாக்காலம்

ஜெயம் தங்கராஜா

அது இறக்கைகள் இல்லாது சிறக்கடித்தகாலம்
இனிமையை அள்ளிப்பருகி துள்ளித்திரிந்த கோலம்
வசந்தம் கூடுகட்ட சுகமும் வசமானதே
நிகழும் பொழுதுகளுக்குள் மகிழ்ச்சி நிசமானதே

படிப்பும் துடிப்பும் பாடசாலையும் இல்லமுமாக
தட்டிக்கொடுப்பு அரவணைப்பில் பெற்றோரின் செல்லமுமாக
கூடிச் சந்தோசித்து எத்தனையெத்தனை
விளையாட்டு
ஊற்றெடுக்கும் உற்சாகத்தை மூலதனமாய் போட்டு

சுகந்தத்தை உள்வாங்கியே பதித்திட்ட காற்தடம்
அற்புதமும் அதிசயமும் உற்பவிக்கும் வாலிபத்திடம்
மீண்டும் வாராத அதுவொரு கானாக்காலம்
மீட்டிவிட நினைவுகளை பூரிப்பிலே நாளும்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading