தேடும் உறவுகளே…
பேரெழில் நாடு
அது ஒரு கனாக்காலம்
நகுலா சிவநாதன்
அது ஒரு களாக்காலம்
நிலாக்கால மேகங்கள் நீந்துகின்ற விண்மீன்கள்
கனாக்கால கோலங்களாய்க் காலச்சுவட்டில்
பதிந்த அந்தக் காலம்
முற்றத்த மணலிலே முழுஇரவும்
அற்புதமாய் பாசஉறவுகள் சூழ
பொற்பதமாய் வாழ்ந்த காலம்
சொற்பனமாய் இருந்ததே!எமக்கு
அது ஒரு கனாக்காலம்
பள்ளிப்பருவம் துள்ளி ஓடி
துயர் மறந்து கிள்ளைமொழிபேசி
கண்கிணிநாதமாய் …….
உரசுகின்ற மொழிக்குள்ளே ஊசலாடி
உள்ளம் மகிழ்ந்தகாலம்
அதுஒருகனாக்காலம்
காலங்களைக் காதலித்த கனாக்காலம்
சாதனைகளும் வெற்றிகளும் சாதித்தகாலம்
விளையாட்டும் ஓட்டமும் விண்முட்டப் பதக்கங்களும் பெற்றிட்டு மகிழ்ந்த காலம்
கனவுகளாய் இன்று மறைந்ததே!
குயிலின் குரலோசை குதூகல மணியோசை
வயலின் வரம்போர நடைபவனி
வாஞ்சையான புல்வெளிகள்
தடவிக்கொடுத்த பயிரினம்
தாவும் முயல் குட்டிகள்
அத்தனையும் ரசித்த அந்த கனாக்காலம்
எமை விட்டுப் போனதோ!
நகுலா சிவநாதன் 1817
