அன்னை 73

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025

அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப் புரிய வைப்பா!

பசிகொஞ்சம் வாட்டினாலும்
பிள்ளை வரவிற்காய் காத்திருப்பு
பக்கத்தில் நாம் வரவே
பளிச்சென்ற முகயொலிப்பு!
அன்பின் பொக்கிஷமும்
அரவணைப்பின் தெய்வமும்

அர்பணிப்பின் வள்ளலும்
பொறுமையின் சிகரமும்
பொல்லாமை நீக்குபவளும்
பலபிள்ளை பெற்றாலும் பாரபட்சமின்றி
திகட்டாத அன்போடு
தினந்தோறும் பாசப்பகிர்வோடு…

சொல்லில் வடிக்க முடிக்கா
சொல் தொடரோடு
மூச்சிறக்கி எமை ஈன்ற அன்னையே…
மூச்சுள்ள வரை மூச்சாய் நாமிருக்க
முதியோர் இல்லமெல்லாம்
முற்றாய் குறைந்து வரும்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading