உயிரான உறவு..

வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் காலமெலாம் தாங்கி...

Continue reading

உயிரான உறவே…

வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே... வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் காட்டி நேசமுடன்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

15.03.2022

சந்தம் சிந்தும் வாரம் -166
தலைப்பு !

“பிறந்தநாள் வாழ்த்துக்கவி”
(இளம் வள்ளுவன் கவித் ) 17.03.2022

தலைமகனே! என்
தவமகனே!/
என்றனை உயர்த்த வந்துதித்த திருமகனே!/
குலம் தழைக்க குலவிளக்கானாய் செல்லமே/
வாழ்வில் வசந்தம் வீசிடச் செய்தவனே!/
உனைவாழ்த்த அன்னையிவள் வார்த்தையின்றி அணைக்கின்றேன்/

அகவை ஒன்பதில் அகமகிழ்வாய் வாழ்த்துகிறோம்/

முத்தமிழால் நீயும் முத்திரை பதித்திடுவாய்/
வித்தைகள் பலகற்று விருட்சமாய் உயர்ந்திடுவாய்/
வள்ளுவப் பெருந்தகையின் கொள்ளும் பேரன்நீயென/
ஊருலகம் உன்னை வாழ்த்திட
வேண்டுமய்யா/

உள்ளம் கவர்ந்த வனாய் உத்தமனாய் வாழ்ந்திடுவாய்!/

பாமுகச் சிறுவரும் பண்புடை பெரியோரும்/
அன்புடன் அரவணைக்கும் மாமாக்கள் மாமிகள்/
அத்தனை உறவுகளும் ஆரத் தழுவியுனை
வாழ்த்தியே நிற்கின்றனர்//

சாதனை படைத்துமே கவித்துவன் நீயும்/
வித்தகனாய் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க செல்லம் வளமோடு/…

நனிநன்றிகள் பாவை அண்ணா🙏

Nada Mohan
Author: Nada Mohan