அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

வியாழன் கவி -2315 பொட்டு

பௌர்ணமி நிலவாம் வதனத்திலே
பார்த்துப் பார்த்து இடுவாய் பொட்டு
பெண்ணுக்கு பெருமை நெற்றியில்
சூடும் வண்ணப் பொட்டாம்.. ஆ …

பிறந்த குழந்தை சிரிப்பினில்
பிறக்கும் பொட்டில் அழகியலே
சிறுமி வண்ணத் தாரகை மின்னிட
சாந்துப் பொட்டு சரிதமாகுமே..

பண்பாட்டுப் பெருமை பழமை
பதுமைக்கு இடுவதே பொட்டாம்
மங்கலம் சூழும் மங்கள வாழ்வில்
மாயங்காட்டும் குங்குமமே..ஏ..

நெற்றியில் சூடும் நேசத்தின் நிறைவே
நித்திய அழகு தேவதை உனதே
பெண்ணே உன்னோடு தொடரட்டும்
பொன்னிகர் பொட்டே பேரின்பமாமே
சிவதர்சனி இரா
1/4/2026

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading