முயற்சி தரும் பயிற்சி..

வியாழன் கவி-2375!!! மண்ணைப் பிளந்துமே கொள்ளும் வைரமும் நிலக்கரி எண்ணற்ற யாவும் பெறவே எத்தனை முயற்சியும் கொள்வார் வானை முட்டி...

Continue reading

20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்

முயற்சியும் பயிற்சியும் இணைவில் மனித வாழ்க்கை வெற்றி பெறும் விடியலை நோக்கி பயணிப்பில் வாழ்வில் துன்பங்கள் ஓடி...

Continue reading

அபிராமி கவிதாசன்.

10.05.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 174
தலைப்பு !
“வார்த்தை அம்பு “
உள்ளம் நோக
உரைக்கும் வார்த்தை
தெள்ளிய மனத்தினில்
தெளிவாய் பதியுமே

அள்ளியே சொற்களை
அம்பென எய்திட
துள்ளியே துடித்திடுவர்
தூண்டில் மீனாக

விதைத்ததே அறுவடை
வினைப்பயன் விளைவாக
எதையுமே எங்கேயும்
எள்ளியே நகைக்காதே

கூடி கற்றிடல்
கோடி பயனுண்டு
நாடி பயின்றிடும்
நட்பிற்கு அழகுண்டு

உள்ளொன்றும் புறமொன்றும்
உரைத்திடல் அழகன்று
வெள்ளை உள்ளத்தின்
வெண்சங்கு நகைப்பழகு

நன்றி பாவை அண்ணா🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading