“அருங் கொடை”

நேவிஸ் பிலிப் கவி இல(388) 30/01/25

அன்புக் கருவூலம்
ஆயிரமாயிரமாய் அதிசயங்கள்
இன்றும் இனிமை சுவையாய்
ஈசனின் ஈகை தருவதோ நம்பிக்கை

உணர்த்தி ,உடைத்து ,உருமாற்றி
ஊசலாடும் மனங்களுக்கு அரு மருந்தாய்
என்றும் புதுமை ,அளிப்பதோ வளமை

ஏக்கங்களை ஆக்கங்களாக்கி
ஐயங்களை அகற்றி பயங்களை மறக்கடிக்கும்
ஒவ்வொரு நாளும் ஓதற்கரிய
இன்பம்

ஓலம் அலங்கோலம்
அனைத்தையும் மாற்றும்
ஔடதமாய்
ஆறாத காயங்களும்
காயாத கசப்புகளும்
கசடற கழுவி கறை திரை நீக்கி

செல்லுகின்ற பாதையிலே
செவிக்கினிய நல் வார்த்தை
நல்குவது யாதோ?
அதுவே “என்வேத புத்தகம்”

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading