அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர்

விதையின் விருட்சம் என்றும்
வாழ்வின் வெளிச்சம் இன்றும்
பாதையின் உச்சம் புத்தகமே

பூத்ததே மனதிலோ இனிமை
சேர்த்ததே அன்றைய பழமை
போர்த்ததே ஆற்றல் அறிவில்

பொத்தகத்தைப் படியுங்கோ என
பெற்றோர் உரைத்துடைமையில்
பெற்ற பொருள் படைத்த புதுமை

நேரம் போவது தெரியாத வாசிப்பு
கரமணைத்த இனிய காதலனாகி
உரமிட்டு ஊக்கமூட்டும் உரிமையில்

புத்தியை அடித்துக் கூராக்கியதே
சுத்தியல் என்னும் புத்தகமானதே
பக்தியாய்த் தொழுது வணங்கும்
அறிவின் விருட்சம் .

Nada Mohan
Author: Nada Mohan