மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

அலை

ராணி சம்பந்தர்

இடி மின்னலோடு கடைந்திடும்
மழை நீரோ மோராகிக் கடலில்
குடைந்து குடித்த அலையினது
குடலோ முட்டிக் குவளையாகக்
குமிழ் விட்டுக் குதூகலித்தவன்

கண்ணுக்கெட்டிய தூரங் காணும்
மண் தொட்டு முத்தமிட்டே முட்டிய
குமிழ் நுரையைக் கரை சேர்த்துத்
திரும்பிப் பாராது செல்லும் பார்
போற்றும் காவியக் கதாநாயகன்

எட்டி எட்டி வானந் தொட்டுத் தலை-
குத்துக்கரணமிட்டு வாலை வாலை
ஆட்டிடும் கதாநாயகி அழகு மீனோடு
விளையாட வானளவு உயரப் பாயும்
பேரலையோ மிதந்து வரும் கப்பலைக்
கட்டிப்பிடித்துக் காலால் உதைத்துக்
கவிழ்த்தவனும் இந்த அலையே .

Nada Mohan
Author: Nada Mohan