முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

அவள் குட்டி தேவதை

ஜெயம் தங்கராஜா

கவி 742

அவள் குட்டி தேவதை

ஆயிரம் நிலவுகள் ஒன்றுகூடி அவளென ஆக
பூவொன்று கால் முளைத்து நடந்துதான் போக
தவழ்ந்துவந்து தங்கக்கட்டி மடிமீது ஏறுதம்மா
மார்பினிலே உதைக்கும் நேரம் கவலை கரைந்துபோகுதம்மா

சின்னத்தேவதையின் சிரிப்பினிலே உள்ளமுருகிக் கரையுதடி
பிஞ்சு கரங்கள் தீண்டும்போது உயிருருகிப்போகுதடி
நரிவெருட்டி தூக்கத்திலே நீ சிரிக்க பூரிப்புடன் இரசித்தேனடி
அரவணைக்கும் நிமிடமெல்லாம் சொர்க்த்துக்குள் நுழைந்தேனடி

தாத்தாவாய் எனையாக்கிய முத்தான பேத்தியும் நீ
பெத்தது மகளெனினும் என் சொத்தே என் சொந்தமே நீ
ஆண்டவரின் அறிவை எப்படியுரைப்பேன் அற்புதம்
பொன்மணியே கண்மணியே கற்கண்டே கணிரசமே

சோறுதண்ணி தேவையில்லை உன்னருகில் கழிக்கையிலே
பேறுபெற்றேன் என் மகளே நீ இறைவன் தந்த பரிசம்மா
குட்டித் தேவதையே இனி என் ஜீவனும் வாழ்வும் நீதானம்மா
சின்னராணியே உன்வரவால் முதுமையையும் மறந்தேனம்மா

ஜெயம்
26-09-2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading