புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

இசை (54)

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-03-2025

பிறப்பிலும் இறப்பிலும்
பின்தொடரும் முணுமுணுப்பாய்
கண்மூடித் தூங்கவைக்க
கையாளும் இசையிதுவாய்.

இருதய துடிப்பும்
இசைக்குமே கருவியாய்
மனிதனின் ஓட்டமும்
மலைக்குமே அதிர்வலையாய்

தாய்வயிற்றின் கருவாய்
தந்தபாடல் நலுங்கு
மண்ணில் உதிர்த்ததும்
மலர்ந்தது தாலாட்டு

இளம் வயதினிலே
காதலும் வீரமும்
உயிர் திறந்தபின்
ஒப்பாரி பிறக்கிதிங்கே

உயிராகவே இசை
உயர்ந்தது உலகினிலே
எதிர்கால சந்ததியும்
எண்ணியிதை இசைத்திடு!

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானநதன் புது வருடம் அறுபது ஆண்டின் பிறப்பு அவனியில் வந்திடும் சிறப்பு அதிகமாய் சேர்ந்திடும் பொறுப்பு அதிகாலை வரும்வரை இருப்பு ஆலயத்தில் மருத்து நீரும் அம்மாவின் தலை முழுக்கும் அட்டிலில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பருவத்தின் படிநிலை உருவத்தில் தளர்நிலை அனுபவம் செறிவிலே ஆனந்த மகிழ்விலே அடைகின்ற தோற்றம் ஆனந்த மாற்றம் கடந்தவை பாடமாய் கற்றவை தேட்டமாய் காலமே...

Continue reading