இது என்ன விண்ணாணம்???

நகுலா சிவநாதன்

இது என்ன விண்ணாணம்???

காலைக்கடனை முடித்திட நீயும்
கண்ணுக்குள் தெரிகிறாய் அம்மா
விண்ணுக்குள் சென்றிட்டாய் யென
விண்ணாணம் சொன்னவர்கள் அன்று

மண்ணுக்குள் புதையுண்டாலும் ……
இரவு மணிக்கணிக்காய் என்னுடன் பேசினாய்
தீயின் சங்கமமானாலும் தீதொன்றும்
நீ செய்ததில்லை….அம்மா

உண்மையாய் நேற்று நீ பேசினாய்
உளமார நினைவாய் இருந்தேன்
நீண்டகாலம் பேசிவில்லையென்று……
அம்மா!! உனக்கொன்று நான் சொல்லணும்
ஆசையாய் எழுந்தேன் ………

அப்போ உன்னைக் காணவில்லை
அது என்ன? அம்மா அம்மா
ஐயய்யோ உணர்ந்தேன் அம்மா வந்தது
உண்மையல்ல…..
கனவேயென உணர்வே வந்தது

இது என்ன விண்ணாணம்
கனவா? காட்சியா?
காலம் தான் பதிலுரைக்கும்
ஏமாறும் நாமும் ஏமாற்றும் கனவும்
அற்பநேரம்தானோ!?
நினைத்துப் பார்க்கிறேன் யாவும் கனவே!!!

நகுலா சிவநாதன் 1802

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading