இது வாழ்க்கையப்பா

ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான வாழ்க்கையை கட்டிவிடும் நினைவுகள்
கடினமானதும் பழகிவிட இலகுவாகுவதுமான நிகழ்வுகள்

வாழ்க்கை ஒரு புதிரான புதிர்
அதை அவிழ்ப்பதோ மனிதனின் மதி
வாழ்க்கை ஒரு மெய்யான கனவுதான்
அதை நிகழச்செய்வது மானுடரின் கடமைதான்

நேசம் பாசம் காதலெனும் உலகம்
சொந்தம் பந்தமென உருகிக்கொண்டே பழகும்
தொடர்கதையாகி நீளும் பக்கங்கலொவ்வொன்றிலும் ஆனந்தமே
புதிய உயிர்களின் வருகையும் சந்தோசமே

துக்கம் மகிழ்ச்சி இரண்டுமே இருக்கும்
அழுதுவிட்டு சிரிக்கையிலே நிம்மதியும் பிறக்கும்
இறைவா உனது பரிசு அற்புதம்
நிறைவான நன்றியை சமர்ப்பிக்கின்றேன் உன்பதம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

Continue reading