இன்றைய மனிதர்

ஜெயம் தங்கராஜா

காலத்தின் போக்கில் வாழ்க்கை செல்கின்றது
ஞாலமும் புதிதாய் மாற்றத்தைக் கொள்கின்றது
பாசமும் நேசமும் பணத்துக்காய் என்றானது
வேஷமும் வாழ்வும் ஒன்றுடன் ஒன்றானது

தனக்காக வாழுக்கின்ற குறுகிய எண்ணம்
கணக்கோடு வாழுக்கின்ற நவீனத்தின் வண்ணம்
இரக்கம் என்பது சொல்லளவில் மட்டுமே
தரமற்ற செயல்களும் வாழ்க்கையை கட்டுமே

பார்த்தும் பார்க்காதுபோல் கண்டுகொள்ளா நகர்வு
சேர்ந்தும் சேராத ஒட்டாததோர் உறவு
இப்போதெல்லாம் நடிப்பு வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது
எப்போதெல்லாம் தேவையோ உச்சத்தை எட்டுது

கண்டால் யாரோ காணவிட்டால் யாரோ
உண்டவீட்டிற்கே துரோகம் செய்யுமிவர் யாரோ
மனச்சாட்சி இல்லாத புதியதோர் பழக்கம்
தனக்குத் தனக்கெனவே மாற்றிக்கொண்டார் இலக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading