இரா விஜயகௌரி

அகத்தின் உணர்வை
தொடுக்கும் தாய்மொழி

உள்ளத்தின் உணர்வினை உய்த்து ஆய்ந்து
உளத்தின் தொடுகையை உவப்பாய் மொழிந்து
வாழ்வியல் வளத்தை நலமுற தொடுக்கும்
அகத்தின் மொழிஇது தாய்தமிழாம் தமிழ்மொழி

தொலைத்த குழந்தைகள் நெஞ்சைத் தொடுவதுமில்லை
அன்பின் உணர்வினை. கலப்பதும் இல்லை
உறவின் பரிவினை உயிர்ப்போடெழுதிட
முயன்றும் முடியா விலங்கினை இடுவார்

அருகினில் இருந்தும் விலகிடும் உறவாய்
தலைமுறை இடைவெளி தாக்கம் நிறைக்கும்
நாவினில் தாய்மொழி தளமிட மறுக்கும்
புலத்தள தொடுகையில் புலனது விரியும்

அம்மா என்பதில் அசைந்தெழும் பரிவு
அனுதினம்அத்தனை பகிர்வும் மொழிவுற
உணர்ந்து உயிர்த்து எழுதிடும் வாழ்வு
இறந்தும் இறவா பதிவினைத் தொடுக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading