இளவாலை அமுதுப்புலவர்

ரஜனி அன்ரன் (B.A) “இளவாலை அமுதுப்புலவர்” 23.10.2025

ஆசிரியர் அதிபர் எழுத்தாளர் கவிஞர் நாடகஆசிரியரென
அனைத்து துறைகளிலும் வித்தகனாய் விளங்கி
இலக்கியப் படைப்புக்கள் பலதையும்தந்து
ஈழத்து இலக்கியவானில் சிறகடித்து
கனடிய மண்ணில் காலும்பதித்து
ஐப்பசித் திங்கள் இருபத்திமூன்றில்
இவ்வுலகைவிட்டு நீங்கினாரே அமுதுப்புலவர் !

சமூகப்பற்றும் படைப்பாற்றலும் மனிதநேயமும் கொண்டு
தமிழ் மாணாக்கர் பரம்பரையையும் உருவாக்கி
படைப்பிலக்கியங்கள் பலதும்படைத்து
பட்டங்கள் பரிசுகளும்பெற்று
பாப்பரசரிடம் செவாலியர் விருதினையும் பெற்று
பைந்தமிழுக்கு ஆற்றினாரே பலதொண்டுகளை !

அழகானதைக் கண்டு குதூகலித்து
அலங்கோலங்களைக் கண்டு பதறி
அநியாயங்களைத் தட்டிக் கேட்கும்
அமுதுப் புலவரின் கவிப்படையல்கள்
அனைத்தும் அற்புதப் படைப்புக்களே !

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading