உணர்வு 90

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025

உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும் எம் மொழியே!

வண்ணப் பாட்டெடுத்தேன் தாயவளே
வாஞ்சையோடு பல கதை தொடுத்தேன்
அன்னை மொழியென கவி கிறுக்கி
உணர்வு பொங்க அகம் குளிர்கின்றேன்

கம்பனின் கருணைக் கவியும்
பாரதியின் கனல் வீரமும்
வணக்கம் சொல்லில் மரியாதையும்
திருக்குறளின் நுட்பமும்,

அழிவின் விளிம்பிலும்
அசையாது எழுந்து நிற்கும் தீச்சுடரே
உன் புகழ் பாடி, உன் வழி நடந்து,
உன் பெருமையுடன் நாங்கள் நிலைக்க

எத்திசை சென்றாலும்
அத்திசை தமிழ் வளர்ப்போம்
எதிர்கால சந்ததிக்கு தமிழின்
விழிப்பின் உணர்வு அளிப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading