உயிர்க்குமா சுவடுகள்

வியாழன் கவிதை …2195!!

உயிர்க்குமா சுவடுகள்!!

செம்மணி தன் வயிற்றுள்
செரிக்காது இருந்திட்ட
எம்மவர் உடலங்கள்
உலகின் முன் காட்சியாய்
சாட்சியமாய் இயம்பி விட்ட
சிப்பாய் தன் கூற்று
மெய்யாகிப் போனதே
உயிர் கொன்று போகுதே..

பிஞ்சுகள் தொட்டு
பள்ளிப் பிள்ளைகள் வரை
எத்தனை எத்தனை
மனம் பித்தென ஆகுதே
மனம் முற்றிய மனிதர்
ஆடிய பேயாட்டம்
காவு கொண்ட உடலம்
இன்னும் அகழ்வினில்
இதயத்தைக் கொல்லும்..

உலகின் முன்னே
நீதி தான் கேட்டார்
அணையா விளக்கு
போராட்டத்தை ஆக்கினார்
தொடர்கதை இதுவோ
தொல்லை விலகுதல் இல்லையோ
இறைவா நீயும் சும்மா
இருத்தல் தான் முறையோ..
சிவதர்சனி இராகவன்
21/8/2025

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading