ஊக்கம் 92

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26

நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்
எதிலும் வெற்றி உனக்கடா

பிறக்கும்போது வெறும் கையுடன்
பிறந்து வந்து விட்டோம்
பெற்றதையிங்கு பகிர்ந்தளித்து
மகிழ்ச்சி நாமும் கொள்வோம்

பிறரின் ஏளனப் பேச்சிங்கே
ஊக்கம் சேர்க்கும் உளியே
புரிந்து தெரிந்து நடந்து
புயலை கையினுள் பூட்டி வைப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading