எனக்கொரு ஆசை(409)

நேவிஸ் பிலிப்
கருவில் உருவாகி
தாய் மடி தவழும் மழலையாய்
கொடி தேடிப் படரும் மலராய்

கொஞ்சு மொழி பேசும் கிள்ளையாய்
பள்ளி செல்லும் பிள்ளையாய்
துள்ளி விளையாடும் மானாய்

அள்ளி அணைக்கும் அம்மா
தோளில் சுமக்கும் அப்பா
பாசம் காட்டும் மூத்தோர்
ஆச்சி கையால் குழைத்த சோறு

ஆசையாய். ஊட்டிவிடும் அம்மம்மா
அடித்துப் பிடித்துப் பங்கு போடும்
அக்கா தங்கை
துணையாய் கூட வரும்
அண்ணன் தம்பி

என் உறவுகளோடு நான்
மீண்டும் மகிழ்வோடு வாழ் வேண்டும்
நிறைவேறா ஆசை எனினும்
நினைக்கிறேன் இது என் ஆசை….

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading