ஏற்றிடம் ஏணிகள்-2027 ஜெயா நடேசன்

ஏற்றிடம் ஏணிகள்-2027 ஜெயா நடேசன்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்
எடுத்தியம்பும் அன்பு மொழிகள்
மொழிகளின் கல்வியை தருபவர்கள்
கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன்
மடைமை இருள் அகற்றி அறிவொளியாய்
பலமாக நின்று உழைத்தே வாழ்வில்
தடம் பதிக்க வழியாக ஆசான்களே
பாடசாலை படிகளில் ஏறிடம் மாணவர்
பாசமுடன் அரவணைத்தே தினமும்
பாடங்கள் கற்று பட்டங்கள் பெற்றிட
பாரினில் உயர்த்திடும் ஏணியாவர்
ஆற்றல் திறமைகள் அறிந்து செயலாற்றுபவர்
பரிவோடும் பணிவோடும் ஆற்றுப்படுத்துவர்
மரியாதையோடு மறைந்தோரையும் நினைப்போம்

Author: