ஒத்திகை

செல்வி நித்தியானந்தன்
ஒத்திகை
இல்லற இணைப்பு இப்போ
ஒத்திகை போன்று நடக்கினம்
இருப்பு அணைப்பு தப்போ
இடர் விலக்கி செல்லினம்

ஒத்திகை பார்கா வாழ்வும்
ஒற்றுமை கொண்டு தொடரும்
ஒத்திருக்கை ஒட்டிய நகர்வும்
ஒப்புவமை சொல்லியே படரும்

இல்லறம் என்னும் நல்லறம்
இன்பமாய் வாழ வழிசமைக்கும்
இகபர சுகமாய் சொல்லறம்
இதமாய் வாழனும் ஒத்திணைவாய்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading