ஒரு வானொலி நேயரின் வாழ்த்தொலி

ஜெயம் தங்கராஜா

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
புதியதை புதுமையை மானிடன் படைத்தான்
வானொலி இல்லாமல் வளர்ச்சியும் இல்லையென
காற்றலை ஊக்கத்தை உண்டுபண்ணும் எல்லையென

புலத்தில் பூத்தது வானொலி ஒன்று
இலண்டன் தமிழ் வானொலி என்று
உண்மையில் நம்மவர்க்கு கிடைத்த பொக்கிஷம்
எண்ணங்களை கவர்ந்திழுத்து வைத்ததுவே தன்வசம்

உருவாக்கவென்று எம்மவரை ஆக்கிக்கொண்டு அன்று
இருபத்தெட்டு ஆண்டுகளை தொட்டுக்கொண்டது இன்று
தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி முடிவில்
எழிலான தொலைக்காட்சியென பாமுகம் வடிவில்

அயராது உழைத்திட்ட அதிபருக்கு வாழ்த்து
உயர்வான எண்ணங்கொண்ட நோக்கத்தையும் சேர்த்து
முயற்சிக்கும் பயிற்சிக்கும் வித்திட்ட தளமன்றோ
உயர்ந்ததே புலம்பெயர்விலும் நமது மொழிவளமன்றோ

ஜெயம்
12.06.2025

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading