மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

ஔவை

பருவ மாற்றம்
=============
பருவங்கள் என்பது
பலதிலும் மாறும்
உருவமும் மாறும்
உண்மையும் அழியும்
கருமேக வாழ்வு
கனகாலம் உண்டோ?
கருவின் பருவம்
கணக்கில் அடங்குமோ?

பூமியில் பருவத்தைப்
புரிந்திட வைத்துச்
சாமியாய்த் தெரியும்
சந்திரன் வாழ்வில்
தேய்கின்ற நிலையும்
தெரிந்த ஒன்றே
மாய்கின்ற உலகினை
மாற்றுதே பருவங்கள்

மாரியில் மகிழும்
மண்ணின் மனதை
வாரிச் செல்லும்
வெய்யிலின் வேகம்
ஏரியில் வாழும்
உயிர்கள் வாழ்வில்
பூரிக்கும் காலம்
பலநாள் இல்லை

உயிருக்கு மட்டுமா
உருவங்கள் மாறும்?
பயிருக்கும் மாறும்
பண்பிற்கும் மாறும்
வெயிலுக்குக் கூட
வெவ்வேறு இயல்பு
தயிராகின் பாலின்
தன்மையே வேறு

பனியோ மழையோ
பளிச்சிடும் வெயிலோ
கனியோ மலரோ
கடலோ வானோ
மனிதனோ மரமோ
மண்ணோ மழையோ
தனியாக ஒவ்வொன்றின்
தன்மையும் மாறும்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

    Continue reading