வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை...

Continue reading

கமலா ஜெயபாலன்

எண்ணம்
இனிக்கும் நினைவுகள் எண்ணத்தில் ஓடும்
கனிந்து மனதில் கரைந்து பாயும்

தந்தையும் தாயும் தந்த பாசமும்
எந்தை நாடும் எழிலான காட்சிகளும்

அண்ணன் அக்கா அனைத்த உறவும்
கண்ணில் நீராகி கவலைக்குள் தள்ளும்

மண்ணில் வீடுகட்டி மகிந்த காலங்கள்
எண்ணத்தில் இருத்தி இழந்தவை போக

இருப்பவை எண்ணி இதயம் நிறைந்து
வருபவை எல்லாம் வளமாய் குவிய

நல்ல மனிதராய் நானிலம் போற்ற
இல்லை என்று எதுவும் வேண்டாம்

இதுவே போதும் இறைவன் தந்தது
அதுவே விதியென ஆறுதல் அடைவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading