கலங்கரை விளக்குகளே…

வசந்தா ஜெகதீசன்
கலங்கரை விளக்குகளே…
வாழ்வியல் நகர்வின் வரைமுறையில்
வடம்பிடித்தே நகரும் தலைமுறையில்
கற்றிடும் அனுபவப் பட்டறிவில்
தாயினம் பாசத்தின் பேரொளியே
தரணிக்கு முதலான கலங்கரையே

நோய் நொடி தீண்டிடும் வேளையிலும்
மருத்துவச் சேவையின் மகத்துவமே
மனிதநேயத்தின் மதிநுட்ப போற்றுதலே
உயிர்களை காத்திடும் கலங்கரையே

முடக்கத்தின் இடரிலும் அலைமோதும்
அவனிக்குள் எத்தனை பேரிடர்கள்
அன்றாடத் தொழிலாளர் வாழ்விடர்கள்
ஆதரிப்போர் கரங்கள் கலங்கரைகள்

ஆபத்து பற்றிப் படர்கையிலும்
அசுத்தத்தை அகற்றும் தொழிலாளர்
அவனியைக் காப்பதில் முதலானோர்
கலங்கரை விளக்கின் பேரொளிகள்

கடந்து பயணிக்கும் மானிடர் நாம்
அனுதினம் நன்றியை விதைப்பாக்கி
அவனியில் வாழ்வோம் கலங்கரையாய்.!:
நன்றி

Author:

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading