கல்லறைகள் 91

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-11-2025

ஆயிரம் கனவுகளோடு
அங்கலாய்த்தவரே நீவிர்
மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!

சிதைந்து போன உடல்கள்
சிதறிப் போன உறவுகள்
பள்ளியிழந்த சிறார்கள்
பறித்துப் போன கனவுகள்

கதறிய இனம் கண்டு
களம் கொண்டாய் அன்று
எந்த நாடும் அணுகவில்லை
ஆண்டவனும் இரங்கவில்லை

கார்த்திகை வந்தாலே
கனத்த மாதமாய்
நெஞ்சம் பதறுது
நினைவுகள் புரளுது

வடுக்கள் பேசுது
கனவுகள் பலிக்கட்டும்
காந்தள் மலரெடுத்து
கல்லறைகள் தொழுவோம்.

Jeba Sri
Author: Jeba Sri

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading