தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

களவு

ராணி சம்பந்தர்

காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப் பலகிப்‌ பெருகிறது

நாலு பக்கமும் ஞாலங் காட்டுகிறது
நூலற்ற மெழுகுதிரியாயக் கண்கள்‌
மின்னி கால் பின்னிட கன்னமிடுகிறது

சொந்தமற்ற பொருளை ஏமாற்றிப்
பலாத்காரம் பிடுங்கியே எடுக்கிறது பறிக்கும் கொள்ளை ஆட் கடத்தல் ,
கொலை,வெட்டுக் குத்துச் தொடர

அள்ளியதில் குடியும் குதூகலமும்
கூத்தும் போதையும் கூடியாடுகிறது
சூளும் சூதுகள் வீழும் வரையிலும்

பாழும் அவர் மனம் மாறித் தேறாத
வரையிலும் ருசி கண்ட பூனைகளில்
களவு மாறாத அலங்கோல அவலமே.

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading