கவிஞன் கவிதை

ஜெயம்
கற்பனை கொண்டு வார்த்தைகள் தீட்டி
சொற்களை அடுக்கி சுவையினை ஊட்டி
அற்புதமான கருத்தினை கருவுக்குள் கூட்டி
கற்றவை பெற்றவையை வரிகளுள் மாட்டி

தனிப்பட்ட அனுபவங்களின் ஈர்ப்புகளின் உத்வேகம்
துணிந்துமே சொல்லடுக்கி செய்திசொல்லி போகும்
தணிந்துவிடா இன்னுமின்னும் என்கின்ற தாகம்
கனிந்துவரும் சொற்பழங்கள் உருசையென ஆகும்

தெளிவாக உலகத்தை ஆழ்ந்தே உற்றுநோக்கி
மொழிகொண்டு விளையாடி படைப்பொன்றை ஆக்கி
துளித்துளியாய் செவிகளுக்குள் தேனதனை தேக்கி
சலிக்காமல் எழுதுவதால் ஆனந்தமே பாக்கி

சுற்றியுள்ள இயற்கையை அணுவணுவாக நேசித்து
இற்றைவரை கவிகளையும் காற்றாக்கி சுவாசித்து
பெற்றுக்கொண்ட ஆனந்தத்தை மறக்காமல் வாசித்து
இற்றைவரை வாழுக்கின்றேன் இறையாக்கி பூசித்து

Nada Mohan
Author: Nada Mohan