காலத்தின் ஒத்திகை…

வசந்தா ஜெகதீசன்
காலத்தின் ஒத்திகையில்
கணதிகளும் மகிழ்வுகளும்
கரம்கோர்த்தே கடந்து செல்லும்
தினம் தினமாய் தீர்வு சொல்லும்
பருவத்தின் எழிலோடு பசுமையும் உறவாடும்
பகலோடு நிறைபொழுதும்
பரஸ்பரமாய் உலாவருமே
சுற்றுலாச் சுவாசங்கள்
சுதந்திரமாய் கதைபேசும்
இயற்கை வள இயல்போடு
இங்கிதங்கள் இசையாகும்
கன்னல் மொழி கதை பேச
காத்திருக்கும் உறவுகளும்
கோடை தரும் குதூகலமும்
காலத்தின் ஒத்திகையில் கடந்து செல்லும் மணித்துளிகள்
நேரத்தின் வார்ப்பிலே நிமிர்வெழுதி
காலத்தின் கலங்கரை ஒளியேற்றும்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading