காலத்தின் பதில் என்னவோ??

நேவிஸ் பிலிப் கவி இல(469)

கடந்த காலம் நினைந்து
வரும் காலம் எதிர்பார்த்து
உளம் நொந்து வருந்தி
அவதிப் படும் நெஞ்சக்கு
ஆறுதல் ஏது

காலம் கடக்கிறது
முடிவுகள் தெரியாமலே
கற்பனையில் கோட்டை கட்டி
வாழ்கின்றோம் நிதமும்

என்று எது எப்போ
ஒன்றும் புரியாமலே
நாட்கள் நகர
காலங்கள் கரைய

நிம்மநி இழந்த நெஞ்சுடனே
வற்றாத கண்ணீருடன்
நகரும் நாட்களுடன்
நாமும் ஓடுகின்றோம்

அலை மோதும் மனதிற்கு
ஆறுதல் தேடுகின்றோம்
ஒரு கணமேனும் எமை நினைத்து
நல் பதில் கூறிடுவாய் காலமே!!

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading