வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை...

Continue reading

கீத்தா பரமானந்தன்

நிச்சயதார்த்தம்

உனக்கென நானும்
எனக்கென நீயும்
ஒன்றாகும் சொந்தம்
உருவாக்கும் இன்பம்!
மூத்தோர்கள் கூடி
முடிவாகும் பந்தம்
முகவுரை காணும்
திருமணக் கோலம்!

இருமனங் கலந்து
இதயங்கள் பேசும்
இனிமைகள் சூடி
உறவென ஆக்கும்
தக்கோர் முன்னே
தட்டுக்கள் மாறும்
பக்கம் இரண்டும்
பரிமாறும் பலவும்!

மலர்களும் மஞ்சளும்
மங்கலம் இசைக்கும்
மனதினில் ஆயிரம்
கனவுகள் இனிக்கும்
வரைமுறை காணும்
வனப்புறு நாளாய்
வாழ்வினில் என்றும்
நிச்சயதார்த்தம்!

கீத்தா பரமானந்தன்06-02-2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading