குமுழமுனை.

விண்ணவன் – குமுழமுனை.

ஒரு சுடர் அணைந்ததே…
*~***~*
கொடும் இருள்
விலக்கிடும் ஒளியாய்
செங்கனலென எழுந்ததுவே!‍‍‌!

பகை வென்றிடவே
துடித்ததுவே பகைவர்களை செந்தீயினிலே எரித்தே; அன்பர்கள்தனை
காத்திடவே ஒர்
சுடரென ஒளிர்ந்ததுவே;

விதி செய்த விளையாட்டிலே
நமக்கு அரணாய்
நின்ற அச் சுடரோ
அணைந்ததுவே அன்று;

அச்சுடர் அணைந்தாலுமே
அச்சுடர் தந்திட்ட – அவ்
ஒளிதனிலே கிடைத்திட்ட நினைவுகளோ
என்றும் எம் நெஞ்சங்களிலே
நீங்கா நினைவாய்
ஒளிருமே….
*~***~*
விண்ணவன் – குமுழமுனை…

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading