குறை

ஜெயம்

குறைகளும் நிறைகளும் எவரிடமும் இருக்கும்
பறைதட்டியதை சொல்வதனால் நன்மையுண்டோ எவர்க்கும்
பிறர்மட்டில் தவறுகளை காணுகின்ற போக்கு
பிறவிக்குணமது மாறாததென்பது பெரியோரின் வாக்கு

பிறரை கடிந்துரைக்கும் பழக்கத்தை மாற்று
சிறப்பானவர்கள் யாரெவரென அதையுமொருமுறை காட்டு
வெள்ளைத்திரையில் கறுப்புப்புள்ளியை மட்டும் பார்க்காதே
தொல்லையே கொடுப்பதற்கென வாழ்க்கையை ஆக்காதே

தன்னை நல்லவனாய் காட்டவே விரும்பியே
இன்னொருவன் குறைபாட்டை பார்க்கலாமோ திரும்பியே
அவரவர் செய்வது அவரவரையே சாரும்
எவரெவருக்கு எதுவென கர்மாவே கூறும்

மற்றவர் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பு
குற்றங்களை மட்டும் கண்டுபிடிக்கும் பிழைப்பு
திருந்துவார் அவரெனில் திருந்திடுவார் தானாக
வருத்தாதே உன்வாழ்வை குறைகூறி வீணாக

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading