கெங்கா ஸ்ரான்லி

இது தான் இன்றைய வாழ்வா

பண்பாடு காக்க
பந்தங்கள் கூடும்.
சொந்தங்கள் தேடும்
சொத்துக்கள் சேரும்.
மந்தமான வாழ்வில்
மகிழ்வு தொலைந்தது.
விந்தையான மனிதர்
விலங்கை மாட்டுகிறார்.
சந்தமான தமிழர்
சதங்கை கட்டுகிறார்.
முன்றலிலே ஆடுவதற்கு
மூக்கனாங் கயிறுகட்டி
பிந் நிற்போர் இழுக்க
பின்னால் நின்றியக்கம்
எந்தோர் காத்த பெருமை
எல்லாமே தொலைத்தாயிற்று.
சந்தையிலோர் பலி ஆடாக
சந்திவிலை பேசுகிறார்.
மக்களை மக்கள்
விற்கும் தோரணை.
மாந்தரே வியக்கும் வண்ணம்
எல்லாமே விட்டுப்போச்சு
ஏழைமனம் வில்லாச்சு,
ஏங்கும் உள்ளம் பெரிதாச்சு,
மும்மாரி பெய்தது போல்
மூத்தகுடியினர் வாழ்ந்த வாழ்வு
சந்தமாகிய கூட்டிலிருந்து
சொந்தம் எல்லாம் விலகி
இடைவெளிகள் கூடுகின்றது
இது தான் இன்றைய வாழ்வு.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading